பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு குறிப்பிடத்தகுந்த தீபன் அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தார். பெலோப்பிடாசு ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவர் தன் நண்பர்களுக்காகவும் பொதுச் சேவைக்காகவும் பங்காற்றினார். அதே நேரத்தில் இவர் ஒரு விளையாட்டு வீரரைப்போன்ற கடினமான வாழ்க்கையை வாழ்வதில் மனநிறைவு அடைந்தார்.கிமு 384 இல், இவர் மான்டினியா முற்றுகையின் போது எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட தீபன் குழுவில் பணியாற்றினார். அங்கு இவர் ஆர்க்காடியன்களால் காயப்படுத்தப்பட்டார். ஆபத்தான முறையில் காயமடைந்த இவர் எபமினோண்டாசு, அஜெசிபோலிஸ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.மேலும்...
2026 அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளைக்கு (படம்) அமைதி, மற்றும் பன்னாட்டுச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஓர் அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம். 1930-களில் இது உருவாக்கப்பட்டது.
சென்னை, பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வரும் வரதராஜன். தா என்பவர் தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுஉதவி எனும் புனைப்பெயரில் 2024 ஆம் ஆண்டு முதல் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். ஊர்கள் தொடர்பான கட்டுரைகளில் புவியியல் ஆள்கூறுகளை மிகத் துல்லியமாகக் குறிப்பிடுவதில் ஆர்வம் கொண்ட இவர், தனக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருப்பவர் சா. அருணாசலம் என்று குறிப்பிடுகிறார், இந்திய அளவில் நடைபெற்ற, 'கேரளக் கலாச்சார மாதம் 2026' விக்கிப்பீடியாக் கட்டுரைகள் தொகுத்தல் போட்டியில் (சூலை - ஆகத்து 2026) பங்கு பெற்று, இந்தியா முழுவதும் பங்கு பெற்ற 66 பயனர்களுள் முதலிடம் பெற்றார். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா, அந்தத் தொகுத்தல் போட்டியில் முதலிடம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருமண்டபம் எனும் கட்டுரையை முதலாவதாகத் தொடங்கிய இவர், கைப்பேசி வழியாக மட்டுமே தொகுத்தல் பணிகளைச் செய்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,91,258 கட்டுரைகள் உள்ளன.மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.