சியாகி முகாய்
| சியாகி முகாய் | |
|---|---|
| நாஸ்டா/ஜாக்சா விண்வெளி வீராங்கனை | |
| நிலை | ஓய்வு பெற்றவர் |
| பிறப்பு | மே 6, 1952 தட்பேசி, குன்மா மாகாணம், யப்பான்[1] |
வேறு பணிகள் | மருத்துவர் |
விண்வெளி நேரம் | 23d 15h 39m |
| தெரிவு | 1985 நாஸ்டா குழு |
| பயணங்கள் | STS-65, STS-95 |
திட்டச் சின்னம் | |
சியாகி முகாய் (Chiaki Mukai, முகாய் சியாகி, பிறப்பு 6, மே, 1952) என்பவர் ஒரு மருத்துவர்; சாக்சா விண்வெளி வீராங்கனை ஆவார்.[2] விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் யப்பானிய பெண், இரண்டு முறை விண்வெளியில் பறந்த முதல் யப்பானிய குடிமகள்; விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் ஆசியப் பெண் என்ற சாதணைகளைப் புரிந்தார்.[1] இரண்டுமே விண்ணோட்ட பயணங்களாகும்; இவரது முதல் பணியான எஸ். டி. எஸ். -65-இக்காக 1994 யூலையில் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இவரது இரண்டாவது விண்வெளிப் பயணமானது எஸ். டி. எஸ். -95 பணிக்காக டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் 1998-இல் பயணம் மேற்கொண்டார். மொத்தத்தில் இவர் 23 நாட்களை விண்வெளியில் செலவிட்டார்.
முகாய் 1985-இல் யப்பானிய தேசிய விண்வெளி முகமையான நாஸ்டாவால் (இப்போது ஜாக்ஸா என்று அழைக்கப்படுகிறது) விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர், இவர் யப்பானின் மிகப் பழமையான பல்கலைக்கழகமான கியோ பல்கலைக்கழகத்தில் இதய அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக இருந்தார். 2015-ஆம் ஆண்டில், இவர் தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரானார்.[3] கூடுதலாக, அவர் ஜாக்ஸா தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தார்.[2]
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]சியாகி முகாய் கன்மா மாகாணத்தின் தத்பயாசியில் பிறந்தார். 1971 இல் தோக்கியோவில் உள்ள கியோ மகளிர் மூத்த உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் 1977 இல் கியோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்; 1988 இல் அதே கல்லூரியில் உடலியங்கியலில், முனைவர் பட்டம் பெற்றார்; அந்தப் பல்கலைக் கழகத்தில் இதய அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பை பெற்றார்; 1989 இல் யப்பான் அறுவை சிகிச்சை சங்கத்தால் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என இவருக்கு சான்றளிக்கபட்டது.[1]
முகாய் அமெரிக்க விண்வெளி மருத்துவ சங்கம்; யப்பான் சொசைட்டி ஆஃப் மைக்ரோ கிராவிட்டி (நுண் ஈர்ப்பு) அப்ளிகேஷன்ஸ்; யப்பான் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் அண்ட் என்விரான்மெண்டல் மெடிசின்; இதய மற்றும் நெஞ்சக்கூடு அறுவை சிகிச்சைக்கான யப்பானிய சங்கம்; ஜப்பான் அறுவை சிகிச்சை சங்கம்; போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் மகியோ முகாய், எம். டி., பி. எச். டி என்பவரை மணந்தார். இவரது பொழுதுபோக்கு அம்சங்களாக மலைச்சரிவு பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், ஸ்கூபா டைவிங், டென்னிஸ், கோல்ஃப், ஒளிப்படம் எடுத்தல், அமெரிக்க இலக்கியம் வாசித்தல், பயணம் போன்றவை உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 "CHIAKI MUKAI (M.D., PH.D.), JAXA ASTRONAUT (PAYLOAD SPECIALIST)" (PDF). NASA. October 2003. Retrieved April 14, 2021.
- 1 2 "Chiaki Mukai (M.D., Ph.D.)". JAXA. May 2, 2016. Retrieved November 23, 2018.
- ↑ Project Professor Chiaki Mukai's inauguration as Vice President of the Tokyo University of Science Tokyo University of Science