ஆத்ம வித்யா விலாஸம் [Book & MP3 Audios]
Audio With External Links Item Preview
2,405 Views
1 Favorite
IN COLLECTIONS
The High Fidelity Emporium and Orchestrion PotpourriUploaded by Unknown on
Keep the news in the Wayback Machine. Sign Fight for the Future's letter.


குறிப்பு:-
இங்கு உள்ள ஆடியோக்களை பதிவிறக்கம் (Download) செய்ய விரும்புபவர்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள VBR MP3 என்ற இணைப்பை அழுத்தி ஒவ்வொரு ஆடியோ ஃபைல்களாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேலும், “ஆத்ம வித்யா விலாஸம்” என்ற ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய அதுப்போன்றே இங்கு கொடுக்கப்பட்டுள்ள PDF என்ற இணைப்பை அழுத்தி புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்)
ஆத்ம வித்யா விலாஸம் நூலைப் பற்றி...
ஒரு ஜீவன்,
தக்க குருவை அடைந்தானானால், அவர் அருளால் அவரிடம் உள்ள ஸ்ரத்தையால், பக்தியால், அவனால்
கரையேற முடியும். அறிவு துலங்கும்.
பாசி விலகும். மாயை அறுபடும். தேகம்தான் ஆத்மா என்கிற தேஹாத்ம புத்தி அகலும். விடா முயற்சியாலும் பயிற்சியாலும் உண்மையிலே தான்யார் என்று அறிவான்.
அதற்கும்
அவன் உடலுக்கும் என்ன உறவு என்று புலனாகும். இதுவே அவனை சத் சித் ஆனந்தமாக்கும். துக்கம்
சுகம், துன்பம் இன்பம் எதுவும் நெருங்காமல் அவன் சமநிலையில் எப்போதும் நிலைப்பான். சுத்த சைதன்யநிலை ஆனந்த
ஸ்வரூபத்தை அவனுக்கு கொண்டுவரும். ஆழ்ந்த அமைதியின் உருவே அவன்.
குருவின் கடாக்ஷம் பூரணமாக ஜீவன் மேல் இருக்கும் பக்ஷத்தில் ஆனந்த சாகரத்தில் அவன் மூழ்குவான். அவன் மனம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து உலக விவகாரங்களில்
இருந்து துண்டிக்கப்பட்டு எதில் இலயிக்க வேண்டுமோ, அந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தில் நிலைத்து
நிற்பான். மாயை மறைகிறது. இத்தகைய ஜீவன்தான் பிரம்ம ஞானி.
இத்தகைய குருவின் அருளால், ஜீவனுக்கு பரிபூர்ண ஆனந்தம் மட்டும் அல்ல அசைவற்ற ஆழ்ந்த அமைதி கிட்டுகிறது. அவனது ஹ்ருதயம் உலகியல் சம்பந்தப்பட்ட இன்ப துன்பங்கள் அறவே நீங்கி, சம நிலையில் ஆத்மாவோடு ஒன்றிய இயல்பு ஏற்படுகிறது. ஹ்ருத்+அயம் (ஹ்ருதயம் ஆத்மாவே தான் ஆகிய நிலை) அதுவே, ஆனந்தப் பரவச நிலை.
2,405 Views
1 Favorite
Uploaded by Unknown on